[X] Close >

எம்.எல்.ஏவை கண்டுபிடிச்சு கொடுங்க: நீதிமன்றத்தில் வழக்கு

MLA-Missing--Case-filed-in-Court

கிணற்றைக் காணோம் என்று திரைப்படத்தில் வந்த நகைச்சுவையைக் காட்சியைப் போன்று, குடியாத்தம் எம்எல்ஏ-வைக் காணவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


Advertisement

அதிமுக எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, அதே கட்சிப் பிரமுகர் வானமாமலை என்பவர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார். அந்த மனுவில், தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதியிலேயே இல்லாமல் புதுச்சேரியிலுள்ள சொகுசு விடுதியில் தங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமியை நீக்கக்கோரி டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏ-க்கள் 19 பேர் கடந்த 22-ஆம் தேதி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துவிட்டு புதுச்சேரியில் உள்ள சொகுதி விடுதியில் தங்கியுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக எம்எல்ஏ-க்கள் அங்கு தங்கியுள்ள நிலையில், குடியாத்தம் எல்எல்ஏ-வைக் காணவில்லை என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close