[X] Close

மினி லாரி மோதி பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நபர்: சிசிடிவி காட்சிகள்

Subscribe
Lorry-accident-near-Kanyakumari--CCTV-footage

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கட்டட ஒப்பந்ததாரர் மீது மினி லாரி மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Advertisement

குருசடி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் நாகர்கோவில் பெண்கள் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வேகமாக வந்த மினி லாரி அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மினி லாரியின் சக்கரங்களுக்கு இடையே சிக்கிய செல்வராஜ் பல அடிதூரம் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்த விபத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விபத்து நடைபெற்ற பின்னர் அந்த லாரியில் பயணித்த நபர் கூட அங்கிருந்து விலகி செல்கிறார்.

ஓட்டுநர் பலரிடம் உதவி கேட்டும், சாலையை கடக்கும் எவரும் நின்று உதவாமல் வேடிக்கை பார்த்தவாறே கடந்து செல்லும் காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன. விபத்து குறித்து வடசேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close