JUST IN

Advertisement

புரோ கபடி லீக் தொடர்: குஜராத் அணிக்கு 5-வது வெற்றி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புரோ கபடி லீக் தொடரில் குஜராத் அணி ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.


Advertisement

அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்த்து குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி விளையாடியது. விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் 27-24 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் அணி வெற்றியை வசமாக்கியது.

மற்றொரு போட்டியில் புனேரி பல்தான் அணி, 34-17 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வென்றது. இதுவரை நடைபெற்றுள்ள லீக் ஆட்டங்களின் முடிவில், ஏ பிரிவில் குஜராத் அணி 28 புள்ளிகளுடன் முதலிடத்திலும், புனே அணி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இன்று நடைபெறும் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, ஹரியானா அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement