[X] Close >

ஓவியாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினாரா சிம்பு...?

Simbu-asked-if-he-wanted-to-marry-Oviya-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியாவுக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்தனர்.


Advertisement

ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்து சிம்பு தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அவர் தனது ட்விட்டரில் “ஓவியா உன்னை திருமணம் செய்ய ரெடி, தைரியமான பெண், உங்களுக்கு கடவுளின் ஆசிகள்” என்று அவர் பதிவிட்டதாக செய்திகள் வெளியாகி வைரலானது.

சிம்புவின் ட்விட்டர் பக்கத்தில் தேடிப்பார்த்தபோது அத்தகைய பதிவு இல்லை. இதனையடுத்து, சிம்பு அந்தப்பதிவை சில மணிநேரங்களில் நீக்கிவிட்டதாக பலரும் கூறி வந்தனர்.


Advertisement

இதுகுறித்து சிம்பு தரப்பினரிடம் விசாரித்தால், “அது போலியான ட்விட். கடந்த காலங்களில் இப்படி சிம்பு ட்விட்டரில் வெளியிட்டதாக பல போலி செய்திகள் வந்துள்ளன. ஆனால் அடிப்படையற்ற இதுபோன்ற போலி செய்திகளை மீடியாக்களும் வெளியிடுவது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற மலிவான செயல்கள் மூலம் சிம்பு விளம்பரம் தேடிக்கொள்பவர் அல்ல. இது சிம்புவை பின்தொடர்பவர்களுக்கு தெரியும். #God_Blessings என்கிற ஹேஷ்டேக் செய்திருப்பதைப் போன்று அந்த போலி பதிவில் இடம்பெற்று இருக்கிறது. அப்படிப்பட்ட ஹேஷ்டேக் உருவாக்கப்படவேயில்லை. இதன் மூலம் அந்த ட்விட் போலியானது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது” என்கின்றனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close