மரக்கன்றுகள் நடும் பணியை புத்தாண்டு உறுதிமொழியாக எடுக்க வேண்டும்.. மு.க.ஸ்டாலின்

MK-stalin-demand-New-year-resolution

மரக்கன்றுகள் நடும் பணியை ஒவ்வொருவரும் புத்தாண்டு உறுதிமொழியாக எடுத்து இயற்கை செல்வத்தை காப்பாற்ற வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்தா புயல் காரணமாக கணக்கில் அடங்காத மரங்கள் முறிந்து விழுந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். எனவே சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு, மரக்கன்றுகளை நடும் பணியை அனைவரும் புத்தாண்டு உறுதிமொழியாக எடுக்கவும், நடும் மரங்களை பாதுகாக்கவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் வர்தா புயலால் காரணமாக தனது வீட்டுப் பகுதியில் விழுந்த மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளையும் மு.க.ஸ்டாலின் நட்டு வைத்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement