[X] Close

” எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வேறு ஒருவருக்குதான் ஓபிஎஸ் கேட்டார்” - ஆர்.பி உதயகுமார்

Subscribe
ex-admk-minister-rb-udhayakumar-interview

‘அம்மாவின் கட்சிக்கும் ஆட்சிக்கும் இடைஞ்சல் தராமல் வழிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறேன்’ என்று ஒதுங்கியிருந்த சசிகலா அடுத்தடுத்து ஆடியோ வெளியிட்டு அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துவரும் சூழலில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான  ஆர்.பி உதயகுமாரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்,


Advertisement

சசிகலாவின் ஆடியோ தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கிறதே?

“எனக்கு அந்த ஆடியோ குறித்து எதுவுமே தெரியாது. அந்த ஆடியோவையும் நான் கேட்கவில்லை. அதற்குதான், எதிர்க்கட்சித் தலைவர் கருத்து சொல்லிவிட்டாரே?”.


Advertisement

 ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல் முற்றி வருகிறது என்று சொல்லப்படுகிறதே?

 “ஒரு குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் எப்படி இருக்கிறதோ அப்படித்தான், ஒரு கட்சியிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். கருத்து வேறுபாடுகள் இல்லை என்றால் அங்கு வளர்ச்சி இல்லை என்று அர்த்தம். வேறுபட்டக் கருத்துக்களை பகிர்ந்துகொண்டால்தான் ஆரோக்கியமாக இருக்கும். அம்மா மறைந்தபிறகு கட்சியை மூத்த தலைவர்கள் ஜனநாயகப்படி வழிநடத்தி வளர்த்து வருகிறார்கள். அதில்,பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் வருவது உண்டு. கட்சி நலன்கருதி நாட்டு மக்கள் நலன் கருதி அம்மாவுக்கு கொடுத்த சத்திய வாக்கின்படி கருத்து பரிமாற்றங்கள் வேறுபாடுகள் வருவதை மறைக்க முடியாது. ஆனால், அந்தக் கருத்து வேறுபாடுகள் நிச்சயம் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஓபிஎஸ் அண்ணனுக்கும்  இடைவெளியை ஏற்படுத்தாது. ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்கள் இருப்பதுதான் வளர்ச்சிக்கான அடித்தளம்.

image


Advertisement

ஆனால், சசிகலாவே ஓபிஎஸ்-இபிஎஸ் சண்டையிட்டுக்கொள்கிறார்கள் என்கிறாரே?

  “நிச்சயமாக சண்டையே இல்லை. இல்லாததை எப்படி சொல்வது. இருவருமே கட்சி நலனுக்காக எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருக்கிறார்கள். எதையும் விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான், நான்கு ஆண்டுகள் ஒன்றாக இருந்து முன்மாதிரியாக ஆட்சி செய்தார்கள்”.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஓபிஎஸ் எதிர்பார்த்ததாக சொல்லப்பட்டதே?

  “எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஓபிஎஸ் கேட்கவே இல்லை. அவர் இன்னொருவரைத்தான் முன்மொழிந்தாரே தவிர, அவருக்குக் கேட்கவில்லை”.

- வினி சர்பனா

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close