[X] Close

கருப்பு பூஞ்சை மருந்து வாங்க தமிழ்நாடு அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு

Subscribe
Rs-25-crore-given-from-CM-corona-fund-to-buy-medicine-for-black-fungus

கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை வாங்க முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அரசு, சினிமா பிரபலங்கள் உட்பட பொதுமக்கள் பலரும் தங்கள் நிதிகளை தொடர்ந்து அளித்துவருகின்றனர். கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.280.20 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. ஏற்கெனவே சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், கொரோனா சிகிச்சை மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு ரூ.41.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், பொது நிவாரண நிதியிலிருந்து கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்துவாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close