தனுஷ்கோடி கடலில் மூழ்கிய 4 பேர் மீட்பு: ஒருவரை தேடும் பணி தீவிரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனுஷ்கோடி கடலில் குளித்த போது ஒரே குடும்பத்தை சேந்த 5 பேர் அலையால் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் பல மணி நேர முயற்சிக்குப் பிறகு மீனவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர்.


Advertisement

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்துள்ளார். ராமேஸ்வரம் கோயில் தரிசனத்திற்குப் பின் தனுஷ்கோடிக்கு சென்ற அவர்கள் கடலில் குளித்துள்ளனர். அப்போது, சுபஹி, கேசவன், பரமேஸ்வரி ராஜா, செல்வா உள்ளிட்ட ஐந்து பேர் திடீரென அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீஸார் மீனவர்கள் உதவியுடன் நான்கு பேரை மீட்டனர். அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செல்வா என்பவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement