[X] Close

’தோழா’ பட இயக்குநர் வம்சியுடன் இணையும் விஜய்

Subscribe
Vijay--Vamsi-Paidipally-team-up-for----Thalapathy-66---

நடிகர் விஜயின் 66 ஆவது படத்தை தெலுங்கு திரையுலக இயக்குநர் வம்சி இயக்க உள்ளார்.


Advertisement

நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்க உள்ளார். தெலுங்கு ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்தத்தகவலை  அவர் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் முடிவடைந்த பின்னர், விஜய் 66 படத்திற்கான பணிகள் தொடங்கும் என்றும் படத்தில் பணிபுரியும் கலைஞர்களின் விவரம் ஊரடங்கிற்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் இந்தப்படத்தை பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கில் சாப் படத்தை தயாரித்த தில் ராஜூ தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. வம்சி இறுதியாக மகேஷ் பாபு மற்றும் பூஜா ஹேக்டே நடிப்பில் வெளியான மகராசி படத்தை இயக்கி இருந்தார்.


Advertisement

முன்னதாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close