[X] Close

6 பந்துகளில் 6 பவுண்டரி விளாசிய பிரித்வி ஷா.! 'இறுக' அணைத்து ‘ரிவெஞ்ச்’ எடுத்த ஷிவம் மாவி!

Subscribe
Shivam-Mavi-Revenge-After-Prithvi-Shaw-Hits-Him-For-6-Fours-In-An-Over

ஆட்டம் முடிந்தபின் களத்தில் பிரித்வி ஷா மற்றும் ஷிவம் மாவி ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.


Advertisement

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் எளிதாக வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 154 ரன்களை எடுத்தது. இதன் பின்னர் ஆடிய டெல்லி அணி 16.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் அதிரடி ஆட்டம் டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா, 41 பந்துகளில் 82 ரன்கள் (11பவுண்டரி, 3சிக்ஸர்) குவித்து ஆட்டமிழந்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.


Advertisement

image

பெங்களூர் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஷிவம் மாவி 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து அருமையாகப் பந்துவீசியிருந்தார். ஆனால், இந்த ஆட்டத்தில் ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரில் 6 பந்துகளில் 6 பவுண்டரிகளை விளாசி பிரித்வி ஷா மிரட்டினார். எந்த பக்கம் பந்துவீசினாலும், எப்படி வீசினாலும் பிரித்வி ஷா பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

ஆட்டம் முடிந்தபின் களத்தில் பிரித்வி ஷா மற்றும் ஷிவம் மாவி ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஷிவம் மாவி பிரித்வி ஷாவின் கழுத்தை செல்லமாக இறுகப்பிடித்து ஏதோ கேட்கிறார். அதற்கு பிரித்வி ஷா வலிப்பதுபோல் பாவனை காட்டினார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு, கருத்து கூறப்பட்டும் வருகிறது.


Advertisement

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close