[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் படகுகள் திருப்பி தரப்படமாட்டாது: இலங்கை அமைச்சர்

sri-lankan-minister-talks-about-indian-fishermen

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சகத்திடம் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளதாக இலங்கை கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் இவ்வறிக்கை கையளிக்கப்படும் எனத் தெரிவித்த இலங்கை அமைச்சர் மஹிந்த சமரவீர, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மீனவர் பிரச்சினை தொடர்பாக எமது அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டபோதும்,இது குறித்து எந்தவித அறிக்கையும் இதுவரை தனது அமைச்சகத்துக்கு தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்து கடல்வளங்களை அள்ளிச் செல்வதற்கு இந்திய (தமிழ் நாட்டு) மீனவர்களுக்கு இடமளிக்க முடியாது.

எனவே இவ்விடயத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதேவேளை இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை மீளக்கையளிப்பதென்ற பேச்சுக்கே இடமில்லை.

மீனவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி சட்ட நடவடிக்கைகளை எடுப்போம். மீனவர்களை விடுதலை செய்வதற்கு ஆட்சேபம் தெரிவிக்க மாட்டோம். ஆனால் படகுகளை விடுவிக்க மாட்டோம்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் ரோலர் படகுகள் மூலம் எமது மீன் வளங்களையும் கடற்தாவரங்களையும் அள்ளிச் செல்கின்றனர்.

இதனால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுகிறது. இந்திய ரோலர்கள் அத்துமீறுவதை எனது கண்களால் கண்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close