[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

அடுத்த குறி அமெரிக்கா.. ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் திடுக்கிடும் திட்டம்

isis-plan-to-attack-us

இஸ்தான்புல் நகரில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகள் அடுத்தகட்டமாக அமெரிக்காவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது புதிய வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் 3 பயங்கரவாதிகள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதில் 36 பேர் உயிரிழந்தனர். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஓர்லாண்டோவில் ஐ.எஸ். தீவிரவாதியான ஓமர் மத்தீன் ஓரின சேர்க்கையாளர்கள் கேளிக்கை விடுதியில் புகுந்து நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கி சூடு நடத்திய ஒமர்மத்தீன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சமீபத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஓர்லாண்டோவில் துப்பாக்கிக்சூடு நடத்திய ஒமர்மத்தீனின் தைரியம் பாரட்டுக்குரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீடியோவில் ஐ.எஸ் தீவிரவாதி ஒருவன் சான்பிரான்சிஸ்கோ நகர வீதியில் கார் ஓட்டி செல்வது போலவும். அந்த கார் அந்நகரின் முக்கிய பகுதியான கோல்டன் கேட் பிரிட்ஜை தாண்டி செல்வது போலவும் உள்ளது. அதன் பின்னர், அங்குள்ள முக்கிய இடங்கள் வீடியோவில் குறிப்பிட்டு காட்டப்படுகின்றன. அதே போன்று லாஸ்வேகாஸ் நகரின் முக்கிய பகுதிகளும் வீடியோவில் படம் பிடித்து காட்டப்பட்டுள்ளன.. இதன்மூலம் சான்பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ்வேகாஸ் ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களின் உயிரை பறிக்க ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close