[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

நடுவானில் குலுங்கியது எமிரேட்ஸ்: பயணிகள் காயம்

emirates-flight-hit-by-severe-turbulence-leaving-passengers-injured

நடுவானில் எமிரேட்ஸ் விமானம் குலுங்கியதில், பயணிகள் சிலர் காயமடைந்தனர். 

நியூசிலாந்தின் ஆக்லாந்து சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏ380 என்ற டபுள் டெக்கர் விமானம் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தது. 

துபாயில் இறங்குவதற்கு மூன்று மணி நேரம் இருக்கும்போது, நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம், கடும் காற்றால் திடீரென்று குலுங்கியது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர். சில நிமிடங்கள் தொடர்ந்து விமானம் குலுங்கியதால் பயணிகள் சிலர் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்கள் காயமடைந்தனர். வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கிழே விழுந்தன. சிறிது நேரத்துக்குப் பிறகு இந்த குலுங்கல் சீரானது.

இதுபற்றி எமிரேட்ஸ் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ’’எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் சில பயணிகளும் பணிப்பெண்கள் சிலரும் காயம் அடைந்தனர். விமானம் தரையிறங்கிய பிறகு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டது’’ என்றார்.

சமீபத்தில் கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற ஏர் கனடா விமானம் இதே போன்ற பாதிப்பை சந்தித்த நிலையில், எமிரேட்ஸ் விமானம் கொந்தளிப்பைச் சந்தித்திருப்பது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close