[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மெக்சிகோவில் விமான விபத்து: 13 பேர் உயிரிழப்பு

13-people-found-dead-after-plane-went-missing

மெக்சிகோவில் நடந்த விமான விபத்தில் 6 பெண்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இருந்து மெக்சிகோவில் உள்ள மாண்டெர்ரி என்ற நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று சென்றது.

அதில் 6 பெண்கள் உட்பட 13 பேர் இருந்தனர். விமானம், மெக்சிகோவில் உள்ள நிவாதா என்ற இடத்துக்கு அருகில் வந்தபோது, விமான கட்டுப்பாட்டு அறைத் தொடர்பில் இருந்து திடீர் என மாயமானது. 

இதையடுத்து அந்த விமானத்தை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் கோஹியூலா (Coahuila) என்ற இடத்தில் கிடந்தது தெரிய வந்தது. அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகவும் விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close