[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

செவ்வாய் கிரக புயலால் செயலிழந்த விண்கலம்

cyclone-in-marsh-planet-opportunity-rover-was-disabled

செவ்வாய் கிரகத்தில் வீசிய புயல் காரணமாக காணாமல் போன ஆப்பர்சூனிட்டி ரோவர் மொத்தமாக செயலிழந்துவிட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2003ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறு உள்ளனவா? என்பதை குறித்து கண்டறிய ஆப்பர்சூனிட்டி (Opportunity) என்ற ரோவர் விண்கலத்தை, டெல்டா - 2 ராக்கெட் மூலம் நாசா அனுப்பியது. கடந்த 15 ஆண்டுகளாக ஆப்பர்சூனிட்டி ரோவர் சிறப்பாக செயல்பட்டு பல புகைப்படங்களை அனுப்பி வந்தது. 

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் செவ்வாயில் வீசிய புழுதிப் புயல் காரணமாக, இந்த ரோவர் விண்கலம் காணாமல் போனது. புயலின் வேகம் குறைந்தவுடன் ரோவர் விண்கலம் தென்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். புயலில் ஆப்பர்சூனிட்டி ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்து விட்டதாகவும், அதனுடனான சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். 

சூரிய ஒளியின் மூலம் சார்ஜ் செய்து கொண்டு செயலாற்றும் இந்த ரோவரில் படிந்த தூசு காரணமாக நாசாவுடனான தொடர்பை முற்றிலும் இழந்தது. இதனால் ஆப்பர்சூனிட்டி ரோவரின் செயல்பாடு முடிந்துவிட்டதாக தற்போது நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close