[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

பாகிஸ்தானில் வாக்குச்சாவடி அருகே குண்டுவெடிப்பு தாக்குதல் - 29 பேர் பலி

pakistan-elections-2018-bomb-blast-near-polling-booth-in-balochistan-s-quetta-31-dead-several-injured

பாகிஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து அக்கட்சியின் 5 ஆண்டுகால ஆட்சி கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 

பாகிஸ்தானில் பாராளுமன்றம் மற்றும் 4 மாகாண சட்டசபைகளுக்கு இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ராம் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல், பெனசீர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ ஜர்தாரியும் களத்தில் உள்ளார். நவாஸ் ஷெரீப் சிறையில் உள்ள நிலையில் அவரது சகோதரர் ஷப்பாஸ் ஷெரீப் களத்தில் உள்ளார்.

      

பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குவெட்டா நகரில் வாக்குச்சாவடி அருகே போலீஸ் வாகனத்தை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில்,  5 போலீஸ்காரர்கள் உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அமக்(AMAQ) செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிகிறது. 

  

இருப்பினும் , நாடு முழுவதும் வாக்குப் பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. வன்முறை மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து தீவிர கண்காணிப்புகளுக்கு பிறகே பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இன்னும் சில மணி நேரங்களே உள்ளது வீட்டைவிட்டு வெளியே வந்து வாக்களியுங்கள் என்று இம்ராம் கான் ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார். 

                    

சுமார் 10.6 கோடி வாக்காளர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6வரை நடைபெறும். வாக்குப் பதிவு முடிவடைந்த உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 24 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close