[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மாடியிலிருந்து கீழே விழுந்த குழந்தை ! காப்பாற்றிய கூரியர் ஊழியர் 

child-that-fell-down-from-the-terrace-courier-boy-saved-child

ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தையை, கூரியர் நிறுவன ஊழியர்களும், பொதுமக்களும் காப்பாற்றிய அதிசயம் சீனாவில் நடந்திருக்கிறது.

 ஹாங்ஷூ நகரில் உள்ள ஆறுமாடிக் கட்டத்தில், கூரியர் நிறுவன ஊழியர்கள் சிலர் பொருள்களை விநியோகித்துக் கொண்ட‌ருந்தனர். அப்போது குழந்தையின் சத்தம் கேட்டு மேல்நோக்கிப் பார்த்தபோது, நான்காவது மாடியில் ஒரு குழந்தையின் கை தென்பட்டிருக்கிறது. உடனடியாகச் செயல்பட்ட ஊழியர்களும் பொதுமக்களும், கிடைத்த படுக்கை விரிப்புகளைக் கொண்டு வந்து குழந்தையைப் பிடிப்பதற்கு தயாராகினர். நினைத்தபடி, சில நொடிகளில் அந்தக் குழந்தை கீழே விழுந்தது.

 அதிர்ஷ்டவசமாக, பொதுமக்கள் அந்தக் குழந்தையைப் பத்திரமாகப் பிடித்தனர். ஆறாவது மாடியில் இருந்து, நான்கா‌வ‌து மாடியில் விழுந்த குழந்தை, பின்னர், கீழே விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். இந்தக் காட்சிகள் அனைத்தும் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருக்கிறது. லேசானக் காயமடைந்த குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close