[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன

செய்தி வாசிப்பாளர்களுக்குள் சண்டை: வைரலாகும் வீடியோ 

watch-pakistani-anchors-fight-on-camera-video-goes-viral

செய்தி வாசிப்பாளர்களுக்குள் சண்டை: வைரலாகும் வீடியோ 

செய்தி வாசிப்பின்போதே சண்டைப்போட்டுக் கொண்ட செய்திவாசிப்பாளர்களின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் ஆண், பெண் இருவர் செய்தி வாசித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே மனஸ்தாபம் இருந்துள்ளது. ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை என்றாலும் ஒரே செய்தி தொலைக்காட்சியில் பணி புரிந்து வந்துள்ளனர். இதை அறியாத நிர்வாகம் இருவரையும் சேர்ந்து செய்தி படிக்க வைத்துள்ளது. அவர் செய்தி வாசிப்பின் போது முறையாக செய்தி வாசித்துள்ளனர். இடைவேளை வரும் போது இருவரும் வார்த்தை ரீதியாக சண்டைப்போட்டுக் கொண்டுள்ளனர். கேமிராவில் அந்தக் காட்சிகளும் பதிவாகிவிட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக வசை மாறிப் பொழிந்து கொள்ளும் வீடியோவை அவர்களுக்குத் தெரியாமல் சமூக வலைதளத்தில் யாரோ பதிவேற்றிவிட்டார்கள். ‘இவளோட சேர்ந்து எப்படி நான் செய்தி படிப்பேன்?’ என்பதில் தொடங்கி சண்டை வலுத்துக் கொண்டே போகிறது. இந்த வீடியோதான் இப்போதைய வைரல் கண்டெண்ட். மீடியா மீது ‘அன்பான’ பலர் இதை வம்படியாக ஷேர் செய்து வருகிறார்கள்.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close