[X] Close
JUST IN
  • BREAKING-NEWS என் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்
  • BREAKING-NEWS பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு
  • BREAKING-NEWS ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

கூட்டத்துக்குள் புகுந்த கார் மோதி 6 பேர் பலி: ஆஸி.யில் பயங்கரம்

car-hits-crowd-of-pedestrians-in-melbourne

ஆஸ்திரேலியாவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த கூட்டத்துக்குள் கார் புகுந்த விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 13-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் எப்போதும் பரபரப்பாக இருப்பது பிண்டர்ஸ் தெரு ஜங்ஷன். இங்கு பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதியில் ஏராளமானோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மக்கள் கூட்டத்தில் மோதியது.

அதில் நடந்து சென்று கொண்டிருந்த 6 பேர் பரிதாபமாக பலியாயினர். 13-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீசார் அந்த காரை ஓட்டி வந்தவரையும் அந்த காரில் இருந்தவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் தீவிரவாத தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி போலீசார் ஏதும் தெரிவிக்கவில்லை. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close