[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

ஐ.நா முயற்சியால் ஏமனுக்கு வந்து சேர்ந்தது உணவுக் கப்பல்

yemen-war-uno-confirms-first-food-aid-arrives-at-port-after-blockade-eased

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள செங்கடல் துறைமுகத்துக்கு உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் சென்று சேர்ந்திருப்பதாக ஐ.நா.வின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரியாத் விமானநிலையத்தை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதை அடுத்து, ஏமனின் அனைத்து எல்லைகளையும் சவுதி அரேபியா மூடியது. இதனால் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

பின்னர் ஐ.நா கேட்டுக்கொண்டதற்கிணங்க துறைமுக எல்லையை மட்டும் திறக்க சவுதி ஒப்புக் கொண்டது. இதையடுத்து மூன்று வாரங்களுக்குப் பின் ஏமனின் செங்கடல் துறைமுகத்துக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை ஏற்றி வந்த கப்பல் வந்து சேர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக 25,000 டன் கோதுமை மாவுடன் புறப்பட்ட ஐ.‌நா.வின் கப்பலும் விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close