[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

ஜிம்பாப்வேயில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு தடை

zimbabwe-journalist-on-military-takeover-and-president-mugabe-s-house-arrest

ஜிம்பாப்வே நாட்டுக்குள் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராணுவம் அதிரடியாக அதிகாரத்தை‌ கைப்பற்றியுள்ளது. ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தனது மனைவி கிரேஸை நாட்டின் அதிபராக பதவியில் அமர்த்தும் நோக்கில் துணை அதிபர் எம்மர்சனை பதவி நீக்கம் செய்தார். இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அரசின் முழு அதிகாரத்தையும் ராணுவம் கைப்பற்றியுள்ளது. 

இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டுக்குள் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் வெளிநாட்டுப் பயணிகள் வழக்கம் போல வந்து செல்வதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் தலைநகர் ஹராரேவில் உள்ள சர்வதேச விமான நிலையம் வழக்கம் போல செயல்படுகிறது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் எந்த பாதிப்பும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close