[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை

70வது திருமண நாளை கொண்டாடிய எலிசபெத் ராணி

elisabeth-queen-70th-marriage-anniversary

பிரிட்டன் மகாராணி எலிசபெத் தனது கணவர் பிலிப்புடன் 70வது திருமண விழாவை எளிமையாக கொண்டாடினார். 

பிரிட்டன் மகாராணி எலிசபெத் மற்றும் இங்கிலாந்து கடற்படை அதிகாரி பிலிப்பிற்கு 1947ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது எலிசபெத் ராணிக்கு 21 வயது. இந்த திருமண விழாவில் உலகத்தின் முக்கியத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். 
இவர்கள் கடந்த 70 ஆண்டுகளாக சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது எலிபெசத் ராணிக்கு வயது 91. அவரது கணவருக்கு 96 வயது. இந்நிலையில் மேற்கு லண்டனில் உள்ள அரசு குடும்பத்தின் விண்டோர் கேஸ்ட்ல் வீட்டில், எலிசபெத் மாகாராணி மற்றும் அவரது கணவரின் 70வது ஆண்டு திருமண விழா கொண்டாடப்பட்டுள்ளது. 
இந்த விழா குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் மிக எளிமையாக நடந்ததாக பக்கிங்காம் அரண்மனை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் ராணியின் திருமண நாளை முன்னிட்டு ‌எவ்வித பொது நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு‌ செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close