[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய பாஜக கட்சி அலுவலகத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்
  • BREAKING-NEWS நாகை: அவுரி திடல் அருகே ஆளுநருக்கு எதிராக திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி
  • BREAKING-NEWS சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் திரிபுராவில் காலை 9 மணி நிலவரப்படி 11% வாக்குகள் பதிவு
  • BREAKING-NEWS திருவல்லிக்கேணி ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
  • BREAKING-NEWS திரிபுரா மாநிலத்தில் உள்ள 59 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96

வாடிகனில் சிகரெட் விற்பனைக்கு தடை!

vatican-to-stop-selling-cigarettes-in-its-shops

வாடிகன் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார். 

இத்தாலியில் உள்ள வாடிகன் நகரம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக திகழ்கிறது. தினமும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார். 
’மக்களின் உடல்நலம் பாதிக்கும் செயலில் இந்த புனித நகரம் ஒரு போதும் ஈடுபடாது’ என்று வாடிகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிகரெட் காரணமாக வருடத்துக்கு 70 லட்சம் பேர் பலியாவதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. 2015-ம் ஆண்டு வெளியான புத்தகம் ஒன்றில் வாடிகனில் வருடத்துக்கு ரூ.72 கோடி மதிப்பில் சிகரெட் விற்பனை நடைபெறுவதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்தே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close