[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது
 • BREAKING-NEWS நவ.26 முதல் 28வரை தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்- இந்திய வானிலை மையம்
 • BREAKING-NEWS உத்திரப்பிரதேசம் பண்டாவில் வாஸ்கோடாகாமா- பாட்னா விரைவு ரயிலின் 13 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து
 • BREAKING-NEWS விளை நிலங்களில் ஓஎன்ஜிசி குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து நன்னிலம், ஆண்டிப்பந்தல் உள்ளிட்ட 8 ஊர்களில் கடையடைப்பு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்தை பாஜக வாங்கிக்கொடுத்தது என்று ‘சின்னப்’பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர்- தமிழிசை
 • BREAKING-NEWS எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS மருத்துவர்களின் சேவையை சிவப்புக் கம்பளத்துடன் வரவேற்கிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS ஆட்சி மாற்றம் விரைந்து நடக்க வியூகம் வகுப்போம் - ஸ்டாலின்
 • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு என தனி பேருந்தை ஏன் இயக்கக் கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
 • BREAKING-NEWS புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது
 • BREAKING-NEWS புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் ஆஜர்
 • BREAKING-NEWS நடிகர் விஷால் கூறுவது போல் அன்புச்செழியனுக்கு அமைச்சர்கள் ஆதரவு என்பதில் எந்த உண்மையும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்ஹாசன்
உலகம் 24 Oct, 2017 08:13 AM

ஐநா தினம்: ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் இன்று

72-yrs-of-service-to-the-globe-un-day

ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட அக்டோபர் 24 ஆம் தேதி ஐநா தினமாக இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

உலக நாடுகளில் அமைதி-பாதுகாப்பு தழைத்தோங்கவும், சர்வதேச பிரச்னைகளை சுமூகமாக கையாளவும், ஐக்கிய நாடுகள் சபை 1945-ஆம் ஆண்டு இதே நாளில் உருவாக்கப்பட்டது. பொதுச்சபை, பாதுகாப்பு மன்றம், பொருளாதார மற்றும் சமூக மன்றம், பன்னாட்டு நீதிமன்றம், அறங்காவலர் அவை மற்றும் செயலகம் என ஆறு முக்கிய அங்கங்களுடன் ஐநா சபை நிறுவப்பட்டது. இந்த ஆறு அங்கங்களே சர்வதேச நாடுகளில் நடைபெறும் பல்வேறு பிரச்னைகளை தங்கள் கையிலெடுத்து தீர்வு கண்டு வருகின்றன.

ஐநா அமைப்பின் முக்கிய மற்றும் நிரந்தர அமைப்பாக, பொதுச்சபை உள்ளது. முக்கிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள பொது சபைக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. பொது சபை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கூடி பன்னாட்டு பிரச்னைகளை அலசும். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக 1953-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட், பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டவும், பாதுகாப்பு நடவடிக்கைளை பலப்படுத்தவும் பாதுகாப்பு மன்றம் வழிவகுக்கிறது. 15 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ள நிலையில், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கு மட்டும் தடையில்லா அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார மற்றும் சமூக செயல்பாடுகளை, அதே பெயரில் இயங்கும் அமைப்பு கண்காணிக்கிறது. அறங்காவலர் அவை, உறுப்பு நாடுகளை கண்காணித்து நெறிப்படுத்துகிறது. உறுப்பு நாடுகளின் சர்வதேச பிரச்னைகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் பணியை பன்னாட்டு நீதிமன்றம் செய்கிறது. நெதர்லாந்தில் பன்னாட்டு நீதிமன்றம் செயல்படுகிறது. நிர்வாகப் பணிகளை நிறைவேற்றும் பணியை ஐநா செயலகம் செய்கிறது.

இன்னும் பல கிளை அமைப்புகளுடன் சர்வதேச நாடுகளின் பாதுகாவலனாக விளங்கி வருகிறது ஐக்கிய நாடுகள் சபை. அத்தகைய பெருமைக்குரிய ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட தினமான அக்டோபர் 24-ஐ, 1948-ஆம் ஆண்டு முதல் ஐநா தினமாக உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close