[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
 • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
 • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
 • BREAKING-NEWS நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு
 • BREAKING-NEWS பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அத்திப்பட்டு புதுநகர் அருகே சங்கமித்ரா விரைவு ரயில் மீது மின்கம்பி அறுத்து விழுந்தது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை சிறு சலசலப்பும் இல்லாமல் கட்டிக் காத்தவர் சசிகலா: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS வடகொரியா உள்பட 8 நாட்டுக்கு அமெரிக்கா தடை
 • BREAKING-NEWS செந்தில் பாலாஜி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் 11 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்
 • BREAKING-NEWS ரூ.50,000க்கும் மேல் பட்டாசு வாங்க ஆதார் அவசியம்
 • BREAKING-NEWS டெல்லியில் பா.ஜ.க தேசிய செயற்குழு 2வது நாளாக ஆலோசனை
உலகம் 08 Sep, 2017 12:48 PM

அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் அது வடகொரியாவின் கருப்பு நாள்: டிரம்ப் கடும் எச்சரிக்கை!

america-trump-north-korea

அமெரிக்க ராணுவம் நடவடிக்கை எடுத்தால் அது வடகொரியாவின் கருப்பு நாளாக அமையும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் இன்று பேசிய அதிபர் டிரம்ப், வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்க தனது ராணுவத்தை பயன்படுத்தவில்லை என்றும், அவ்வாறு செய்தால் அது வடகொரியாவின் கருப்பு தினமாக அமையும் என்றும் கூறினார். அத்துடன் வடகொரியா பியாங் கியாங் நகரில் நடத்திய 6-வது அணு ஆயுத சோதனையை குறிப்பிட்ட அவர், சர்வதேச பொருளாதாரத்தை பாதிக்கும் இதுபோன்ற செயல்களையும், மோசமான நடவடிக்கைகளையும் வடகொரியா நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தார்.

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் இனிமேலும் தொடர்ந்தால், அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இனிமேல் வடகொரியாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட வாய்ப்பில்லை என்றும், எனவே அந்நாட்டின் உறவு மற்றும் தொடர்புகளை முழுவதுமாக துண்டிக்குமாறும், அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளிடம் டிரம்ப் வலியுறுத்தினார்.

இதுவரை வடகொரியாவிற்கு ஆதரவு அளித்து வந்த சீனா கூட கடந்த ஐநா கூட்டத்தில், வடகொரியாவின் தவறுகளை ஒப்புக் கொண்டதாகக் கூறிய டிரம்ப், வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு பாடம் புகட்டும் வகையில் எண்ணெய், துணிகள், வடகொரிய வேலையாட்கள் என அனைத்திற்கு தடை விதிக்க ஐநாவும், அமெரிக்காவும் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். எனவே சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் வடகொரியாவுடனான வர்த்தகத் தொடர்பை நிறுத்திக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். மேலும், ஐநாவின் அணு ஆயுத விதிமுறைகளுக்கு எதிரான வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு விரைவில் அமெரிக்கா உரிய பதிலடி கொடுக்கும் என்று அவர் எச்சரித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : AmericaTrumpNorth Korea
Advertisement:
Advertisement:
[X] Close