[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் பங்கேற்கிறேன்: வைகோ
  • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் வைகோ பங்கேற்க உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்றார் வைகோ
  • BREAKING-NEWS திருவள்ளூர்: எண்ணூர், சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது
  • BREAKING-NEWS நீட் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS அனுமதியின்றி பள்ளிகள் நடத்துபவர்களை ஏன் கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதுச்சேரி: வீராம்பட்டினத்தில் உள்ள ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்படுகின்றனர்
  • BREAKING-NEWS ஊழல் இல்லாத புதிய அமைச்சரவை அமைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: திவாகரன்
  • BREAKING-NEWS முத்தலாக் செல்லாது என அறிவித்தது வரவேற்புக்குரியது: ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றவில்லை: தம்பிதுரை
  • BREAKING-NEWS ப்ளூவேல் கேம் வழக்கில் இணையதள நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS மருத்துவ மாணவர் சேர்க்கை நாளை மறுநாள் தொடங்கும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது: மத்திய அரசு
  • BREAKING-NEWS திமுகவுக்கு ஆதரவாக நாங்கள் கிடையாது: நாஞ்சில் சம்பத்
உலகம் 02 Aug, 2017 07:24 AM

ரஷ்யாவில் நீதிமன்றத்தில் கைதிகள் சுட்டுக்கொலை

prisoners-are-shot-dead-in-russia

ரஷ்யாவில் போலீசாரின் துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்ற மூன்று கைதிகள் நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

ரஷ்யாவில் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஐந்து கைதிகளை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள பிராந்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் கொண்டு சென்றனர். அவர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கியுடன் இரண்டு போலீசார் சென்ற நிலையில், மாடியில் உள்ள நீதிமன்றத்திற்குள் செல்ல அவர்கள் லிப்ட்டில் ஏறினர். லிப்ட் 3-வது மாடியில் நின்றபோது, போலீசாரின் துப்பாக்கியை பறித்துக் கொண்டு கைதிகள் தப்பிக்க முயன்றனர். அப்போது தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூன்று கைதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று அதிகாரிகள் காயம் அடைந்தனர். அதில் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 
கைதிகள் ஐந்து பேரும் கார் உரிமையாளர்களை கொலை செய்து காரை திருடுதல் மற்றும் 17 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close