[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
  • BREAKING-NEWS காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது - வைகோ
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 392/4
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார்
  • BREAKING-NEWS 2017 அக்டோபர் வரை 16,301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 52 பேர் உயிரிழந்தனர்- தமிழக அரசு
  • BREAKING-NEWS தாயார் கொலைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை- தஷ்வந்த்
  • BREAKING-NEWS சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்துக்கு விரைவில் நிதி- முதலமைச்சர்
  • BREAKING-NEWS அரசியல் சார்பில்லாமல் நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கையாக இருந்தது- பொன்வண்ணன்
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,039 கன அடியில் இருந்து 1,576 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS கொளத்தூர் நகைகடை கொள்ளையர்களை ராஜஸ்தானில் பிடிக்க முயன்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
  • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 13வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
உலகம் 27 Jul, 2017 04:54 PM

ராணுவத்தில் திருநங்கைகள் சேர்வதற்கு தடை: ட்ரம்ப் அறிவிப்பிற்கு எதிராக போராட்டம்

struggle-against-trump-notification-ban-on-transgender-to-the-army

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர்வதற்கு தடை விதிக்கும் அதிபர் ட்ரம்பின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அமெரிக்‍க ராணுவம் மிகப்பெரிய வெற்றிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள டிரம்ப், திருநங்கைகளால் ராணுவத்தில் ஏற்படும் அதிக அளவிலான மருத்துவ செலவுகள் மற்றும் பிளவுகள் இனி இருக்‍காது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டிரம்பின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வீதியில் திரண்டு போராட்டம் நடத்தும் போராட்டக்காரர்கள், அதிபரின் இந்த முடிவு திருநங்கைகளுக்கு எதிரானது என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

அதிபர் தேர்தலின் போது திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆகியோரின் உரிமைக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ட்ரம்ப், ராணுவத்தில் திருநங்கைகள் சேர்வதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக இன்று காலையில் தெரிவித்துள்ளார். அதேவேளையில், ராணுவ பணியில் இருக்கும் திருநங்களை குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close