[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

ட்ரம்புக்கும் ரஷ்யாவுக்கும் என்ன தொடர்பு?

ex-fbi-robert-muller-investigate-trump-campaign-russia

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ரஷ்யாவுடன் ட்ரம்பின் பரப்புரைக் குழுவினருக்கு தொடர்பு இருந்தாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்கான அதிகாரியாக எஃப்பிஐ அமைப்பின் முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்ரம்புக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான தொடர்பு குறித்து அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நீதித்துறை இந்த முடிவை எடுத்திருக்கிறது. எஃப்.பி.ஐ. மற்றும் நாடாளுமன்றம் நடத்தி வரும் விசாரணையை முல்லர் மேற்பார்வை செய்வார். முல்லரின் நியமனத்துக்கு அதிபர் மாளிகை வரவேற்புத் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை முல்லர் விடுவிப்பார் என்று நம்புவதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

டொனால்டு ட்ரம்பின் பரப்புரைக் குழுவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையேயான தொடர்பு குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்கியதன் காரணமாகவே, கடந்த வாரம் எஃப்பிஐ-ன் தலைவர் ஜேம்ஸ் கோமே நீக்கப்பட்டதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close