[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் வரக் கூடாது: இலங்கை முன்னாள் எம்.பி

rajinikanth-srilanka-visit

யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறும் தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் ‌விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க வரக் கூடாது என இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்த பின்னர் ரஜினி வந்தால் அவரை வரவேற்பதில் பிரச்னை இல்லை என்றும், ரஜினிக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தொலைபேசி வாயிலாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் வருவதற்குப் பதிலாக, தமிழர் பிரச்னையில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close