[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்‌களுக்கு சிலை

japan-to-recall-envoy-from-south-korea-over-comfort-women-statue

ராணுவத்தினரால் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பெண்களை நினைவுபடுத்தும் வகையிலான சிலை அமைக்கப்பட்டதற்கு ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின்போது, கொரியப் பெண்களை ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஜப்பான் மன்னிப்புக் கேட்க வேண்டும், உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாகவே எழுப்பப்பட்டு வருகிறது.பாதிக்கப்பட்ட சுமார் 2 லட்சம் பெண்களில் சுமார் 50 பேர் மட்டுமே இன்னும் உயிருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னையை உலகின் கவனத்துக்குக் கொண்டு வரும் வகையில், பூஸன் நகரில் உள்ள ஜப்பானிய தூதரகத்துக்கு வெளியே ஒரு பெண்ணின் சிலை அமைக்கப்பட்டது.

5 அடி உயரம் கொண்ட இந்தச் சிலை அமைக்கப்பட்டதற்கு ஜப்பான் எதிர்ப்புத் தெரிவித்தது. தென்கொரியாவுக்கான தூதரையும் திரும்ப அழைத்துக் கொண்டிருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close