[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சான்டா கிளாஸின் தபால் நிலையம்.... கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு குவியும் கடிதங்கள்‌...!

santa-claus-s-post-office

தேவைப்படும் மக்களும் உதவவேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் தாத்தா இந்த ஆண்டு குழந்தைகளுக்கு கொடுத்த அறிவுரை.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தங்களுக்கு வேண்டிய பரிசு என்ன என்பதை விவரித்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதங்களை அனுப்பி வருகின்றனர். இவற்றில் பல பின்லாந்தில் உள்ள ரோவனைமி நகரருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கிறிஸ்துமஸ் தாத்தாவின் அதிகாரப்பூர்வ ஊர் பின்லாந்தில் உள்ள ரோவனைமி என்று அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். அங்குள்ள தபால் நிலையம் சான்டாவின் தபால் நிலையம் என்றே பெயரிடப்பட்டுள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் கடிதங்கள் வந்து சேர்கின்றன. ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் குழந்தைகள் கைப்பட எழுதிய கடிதங்கள் இங்கு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு அதிக கடிதங்கள் எழுதிய நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. போலந்து, இத்தாலி, பிரிட்டன், பின்லாந்து, ஜப்பான் மற்றும் ரஷ்யா அதற்கு அடுத்த இடங்களை பிடிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸுக்கு முன் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்வதும் வழக்கமாக உள்ளது. அவர்கள் சான்டாவின் வாகனங்களையும், மான்களையும் ரசித்து பொழுது போக்குகின்றனர். அவருடைய வாகனத்தில் பயணம் செய்தும் மகிழ்கின்றனர். இந்த ஆண்டு சுமார் 20 லட்சம் பேர் இங்கு வந்து சென்றிருக்கிறார்கள். இதனிடையே, தேவைப்படும் மக்களும் உதவவேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் தாத்தா இந்த ஆண்டு குழந்தைகளுக்கு கொடுத்த அறிவுரையாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close