[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

25 அறக்கட்டளைகளின் புரவலர் பொறுப்‌புகளிலிருந்து விலகுகிறார் ராணி எ‌லிசபெத்..!

queen-elizabeth-quitting-of-her-responsibilities

2‌5 அறக்கட்டளைகளின் புரவலர் பொறுப்பிலிருந்து வயது முதர்வு காரணமாக, விலகப் போவதாக‌ பிரிட்டன் ராணி எலிசபெத் அறிவித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 91-ஆவது வயதில் காலடி எடுத்து வைக்க இருக்கும் பிரிட்டன் ராணி எலிசபெத், தனது வேலைப்பளுவை படிப்படியாக குறைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். இதற்கென தான் கவனித்து வரும் பல்வேறு அறக்கட்டளைகளின் பொறுப்புகளை அரச குடும்ப உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்க ராணி முடிவு செய்திரு‌ப்பதாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‌குறிப்பிடப்பட்டுள்ளது.

90 ஆவது வயது முடிவடைவதற்கு முன்னர் ராணி எலிசபெத் தான் கவனித்து வரும் நலக்காப்பாளர் பொறுப்புகளை ஒவ்வொன்றாக தனது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கத் தொடங்‌குவார் என்றும் அரண்மனை அறிக்கை கூறுகிறது. குறிப்பாக விம்பிள்டன் புரவலர் பொறுப்பு, டென்னிஸ் ரசிகையும், கேம்பிரிட்ஜ் கோமானின் மனைவியுமான கேட் மிடில்டன்னிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close