[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

வெளிநாட்டவருக்கு வேலை கொடுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

do-not-offer-employment-for-foreigners-donald-trump

வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பை தாரை வார்க்கும் அமெரிக்க நிறுவனங்கள் அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இன்டியானாவில் உள்ள கேரியர் நிறுவனத்தில் தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கேரியர் நிறுவனம் வெளிநாட்டிற்கு வழங்கி வந்த சுமார் ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பை உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதை பாராட்டிய அவர், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அந்நாட்டு தொழில்நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இதை முன்மாதிரியாகக் கொண்டு பிற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்காவில் தொழில் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு சலுகைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், அதே நேரத்தில் வெளிநாட்டில் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்க நிறுவனங்கள் பொருள்களை இறக்குமதி செய்ய வரிவிதிப்பு அதிகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தேர்தலில் தான் வெற்றி பெற உதவியாக இருந்த இன்டியானா வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Advertisement:
Related Tags : America american donald trump usa
Advertisement:
Advertisement:
[X] Close