[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழையும் படகுகளுக்கு ரூ.17 கோடி அபராதம்

seventeen-crore-penalty-for-boats-intervene-srilanka

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் படகுகளுக்கு ரூ.17 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரவேண்டும் என்று அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா கூறியுள்ளார்.

கடல் பாதுகாப்பு தொடர்பான மாநாடு இலங்கையின் காலே நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 42 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா, மீன்பிடிப்பு தொடர்பான சர்வதேச சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்றும், படகுகளை பறிமுதல் செய்வதோடு அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க நாடுகளுக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்றும் கூறினார். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டுப் படகுகளுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.17 கோடி வரை அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அமரவீரா பேசினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close