[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

சீன அணுமின் நிலையத்தில் பயங்கர விபத்து.. 40 பேர் உயிரிழப்பு..!

china-power-station-collapsed-death-toll-rises-to-40

சீனாவில் உள்ள அணுமின் நிலையம் ஒன்றில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் அணுமின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் உள்ள குளிர்விப்பான் கோபுரம் இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன தொழிற்சாலைகளில் இதுபோன்று விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. இதற்கு காரணம் அங்குள்ள தொழிற்சாலைகளில் போதியளவு பாதுகாப்பு அம்சங்கள் செயல்படுத்தப்படாமல் இருப்பதுதான் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஜியாங்ஸி மாகாணத்திற்கு அருகிலுள்ள ஹூபேயில் உள்ள அனல் மின் நிலையத்தில் எண்ணெய் குழாய் வெடித்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close