[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

'வேகமாக உண்ணும் போட்டி'... அரிசி உருண்டை சாப்பிட்ட ஜப்பான் இளைஞர் உயிரிழப்பு

man-dies-after-participating-in-rice-ball-speed-eating-contest-in-japan

ஜப்பானில் நடைபெற்ற ‘வேகமாக உணவு உண்ணும் போட்டி’ யில் கலந்து கொண்டு அரிசி உருண்டைகளை சாப்பிட்ட ஜப்பான் இளைஞர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் ‘வேகமாக உண்ணும் போட்டி’ ஜப்பானின் ஷிகா பகுதியில் உள்ள ஹிகோன் என்ற இடத்தில் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டு கடந்த நவம்பர் 13-ஆம் தேதியன்று இப்போட்டி நடைபெற்றது. இதில் ஜப்பானை சுற்றியுள்ள பகுதியிலுள்ள பலர் கலந்துகொண்டனர்.

மூன்று நிமிடங்களில் ஐந்து ஓனிகிரி எனப்படும் அரிசி உருண்டைகளை உண்ண முயற்சித்து 28 வயதுடைய ஜப்பானிய இளைஞர் ஒருவர் இறந்ததாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கிறது. உற்சாகத்தில் தொடங்கிய இந்த போட்டி, இளைஞரின் இறப்பினால் பார்வையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இறுதியாக, இப்போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த டாகேறு கோபயாஷி முதலிடம் பிடித்தார். இவர் நியூயார்க்கில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஹாட் டாக்’ உணவு போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவர் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close