[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

ட்ரம்ப் ஆதரவாளர்கள் பெப்சியை புறக்கணிக்க முடிவு....!

trump-supporters-call-to-boycott-pepsi-over-comments-the-ceo-never-made

பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி ட்ரம்ப்பை சமூக வலைத்தளத்தில் தவறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்காவில் பெப்சியை புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப்பை சமூக வலைதளத்தில் பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி தவறாக கூறியதாக டிரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இதனால் பெப்சியை புறக்கணிக்க போவதாக டிரம்ப் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பெப்சி தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி கூறுகையில், தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் தவறான கருத்துகள் எனவும் இத்தகைய வதந்திகளால் பெப்சி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தான் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு பாராட்டுகளை தெரிவித்ததாகவும், இந்திரா நூயி கூறியுள்ளார். இந்திரா நூயி ஹிலாரி ஆதரவாளர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close