[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

ஆப்கனில் ஜெர்மன் தூதரகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்

taliban-attacks-german-consulate-in-afghanistan

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜெர்மன் தூதரகத்தில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பானிஸ்தானில் மசாரி-இ-ஷரீப் நகரில் உள்ள ஜெர்மன் தூதரகம் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர். தற்கொலைப்படை தாக்குதலால் தூதரகத்திற்கு அருகாமையில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளும் சேதமடைந்தன. இருப்பினும் தற்போது நிலைமை போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இதனிடையே இந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்திற்கு தாலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close