[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

narendra-modi-meets-japanese-emperor-akihito

இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா-ஜப்பான் இடையேயான வருடாந்திர மாநாடு, டோக்கியோவில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் இன்று டோக்கியோவில் ஜப்பான் மன்னர் அகிஹடோவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஜப்பான் மன்னர் வெளிநாட்டு தலைவர்களை அவ்வளவு எளிதாக சந்திப்பதில்லை என்பதால் இருவருக்கும் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பின்னர் டோக்கியோவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தியாவில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாகவும், ஜப்பான் தொழிலதிபர்களின் ஆலோசனைகளை ஏற்க இந்தியா தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஜப்பானுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close