[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

இ-மெயில் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஹிலாரிக்கு ஆதரவாக எப்.பி.ஐ கடிதம்

emails-warrant-no-new-action-against-hillary-clinton-f-b-i-director-says

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்ஹிலாரி கிளிண்டன் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புக்கு தமது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தியது தொடர்பான சர்ச்சையில் வழக்கை முடி‌த்துக்கொள்ளலாம் என்ற முந்தைய கருத்தில் மாற்றம் இல்லை என அமெரிக்க புலான்ய்வு அமைப்பான எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இத் தேர்தலில் தொடர்பான கருத்துகணிப்பில் பெரும்பாலும் ஹிலாரியே முன்னிலை பெற்று இருந்தார்.

இந்நிலையில், ஹிலரி தனிப்பட்ட ஈமெயில் முகவரியை அதிகாரப்பூர்வ கடித ‌பரிமாற்றத்திற்கு பயன்படுத்தியது தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்கவுள்ளதாக கடந்த அக்டோபர் 28ம் தேதி எப்.பி‌ ஐ அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தது. இதையடுத்து கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் இருந்த ஹிலாரி பின்னடைவை சந்தித்தார்.

இதையடுத்து, இயக்குநர் ஜேம்ஸ் கார்னி அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஹிலரியின் ஈமெயில் தொடர்பான சர்ச்சையில் மறுவிசாரணைக்கு அவசியமில்லை என கருதுவதாக தெரிவித்துள்ளார். இதற்கு ஹிலாரியின் ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close