[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

மக்களை கேடயங்களாக பயன்படுத்தும் ஐ.எஸ்... மோசுலை மீட்கும் நடவடிக்கை தீவிரம்

i-s-terrorist-attack-in-iraq

ஈராக்கின் மோசுல் நகரை மீட்கும் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசுப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப்படையினர் விமானப்படையின் உதவியோடு ஈராக் அரசுப்படையினர் மற்றும் குர்து பெஸ்மர்கா படையினர் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர். இதுவரை சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஐ.எஸ் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பன்னாட்டுப்படையினர் தெரிவித்துள்ளனர்.

குர்துப் படையினர் மோசுலின் கிழக்கப் பகுதியில் இருந்தும், ஈராக் படையினர் தெற்குப் பகுதியில் இருந்தும் முன்னேறி வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் மோசுலில் உள்ளதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அரசுப்படையினர் உள்ளனர்.

பல இடங்களில் அப்பாவி மக்களை கேடயங்களாக ஐ.எஸ் அமைப்பினர் பயன்படுத்தி வருவதால், ஈராக் ராணுவத்தினர் தொடர்ந்து முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பன்னாட்டுப்படையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே மோசுலில் இருந்து தப்பி வரும் அப்பாவி மக்களை தங்க வைக்க ஐ.நா தற்காலிக முகாம்களை நகரின் வெளியே அமைத்து வருகின்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close