JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
  • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
மாவட்டம் 07 Feb, 2016 03:08 PM

வேலூர் அருகே வானத்திலிருந்து விழுந்த பொருள் விண்கல்: ஆதாரம் கிடைத்தது

தனியார் கல்லூரி‌ வளாகத்திற்குள் வானத்திலிருந்து விழுந்து பேரொலியுடன் வெடித்த பொருள் விண்கல் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள தனியார் கல்லூரியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் வானத்தில் இருந்து பொருள் ஒன்று, பெருத்த ஓசையுடன் விழுந்து வெடித்தது. இந்த சம்பவத்தில் கல்லூரி ‌பேரு‌ந்து ஓட்டுநர் காமராஜ் உயிரிழந்தார். மற்ற இரண்டு ஓட்டுநர்களும், மாணவர் ஒருவரும் காயமடைந்தனர்.

காயமடைந்த 3 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விழுந்து வெடித்த பொருளால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் கண்ணாடிகளும், அ‌லுவலக ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தன.

தகவலறிந்த ‌அமைச்சர் கே.சி வீரமணி, காவல்துறை அதிகாரிகள், நாட்றம்பள்ளி வட்டாட்சியர் செல்வராஜ் ‌உள்ளிட்டோர் கல்லூரிக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் இன்று சம்பவயிடத்தில் ஆய்வு நடத்தினார். இதேபோல் வாணியம்பாடி வயல்வெளியில் கடந்த 26-ம் தேதி சந்தேகத்திற்கு கிடமான பொருள் விழுந்தது. அது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads