[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

காவிரி நீரைத் தர உத்தரவிடக் கோரும் மனு: விரைந்து விசாரிக்க இன்று வலியுறுத்தல்?

cauvery-water-issue-petition-tn-government-urged-today

காவிரியில் தண்ணீரைத் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று வலியுறுத்தும் எனத் தெரிகிறது.

மேலும், உடனடியாக 50 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடவும் நீதிமன்றத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுக்கவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், போதிய நீர் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

காவிரியில் நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்து விடுமாறு விவசாயிகள் விடுக்கும் கோரிக்கையை கர்நாடகா நிராகரித்து வருகிறது.

இதையடுத்து, காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, கடந்த திங்கட்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்கவும், டெல்டா பாசனத்துக்காக உடனடியாக 50 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடவும் உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close