[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: மேனகா காந்தி

jallikattu-is-a-terrible-sport-says-maneka-gandhi

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று மேனகா காந்தி தெரிவித்துள்ளார்

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனைத்து தமிழர்களும் ஆதரவு தருவதில்லை என்றும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதனிடையே ஜல்லிக்கட்டு அபாயகரமான விளையாட்டு என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஜஸ் அவுஸ் பகுதியில் மேனகா காந்திக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை நடத்திய மக்கள் பாதுகாப்பு பேரவையினரை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக நேற்று மேனகா காந்தி அளித்த பேட்டியில் ‘ஜல்லிக்கட்டு நடத்த தடை அமலில் உள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியமான, வரலாற்று சிறப்பு மிக்க விளையாட்டு தான். அதேநேரம் அபாயகரமான, ஆபத்தான ஒரு விளையாட்டு. தமிழகத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் திறமைமிக்க அனுபவம் கொண்டவர்கள். தமிழகத்தில் மக்களுக்கு செய்ய வேண்டிய பல பணிகள் உள்ளன. அதை செய்யாமல் அரசியல் காரணங்களுக்காக ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்வதை அவர்கள் கைவிட வேண்டும்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close