JUST IN
  • BREAKING-NEWS நாகை: தலைஞாயிறு பகுதியில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: திருப்போரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 மேம்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS அரசு முறை பயணமாக ஜூலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: அமைச்சர் கமலக்கண்ணன்
  • BREAKING-NEWS யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க வேண்டும்: சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் விரைவில் மணல் விலை குறையும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியில் தமிழகத்தின் 80% கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
தமிழ்நாடு 21 Jul, 2016 03:20 PM

தமிழக பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி, விவசாயத் துறைகளுக்கு அதிக நிதி

Cinque Terre

2016 -17ம் நிதி ஆண்டுக்கான திருத்திய நிதி நிலை அறிக்கையை தமிழக சட்டபேரவையில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், திருத்திய நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்த 7ஆவது பட்ஜெட் இதுவாகும். காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை அவர் வாசிக்கத் தொடங்கினார்.

சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த உரையை அவர் ஒன்றரை மணிக்கு வாசித்து முடித்தார். அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த பல அம்சங்களுக்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், பள்ளிக்கல்வி, வீட்டு வசதி, விவசாயம், சாலைக் கட்டமைப்பு, நீராதார மேம்பாடு ஆகிய துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார். அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் நிதியமைச்சர் கூறினார். சென்னையில் பணிகள் நிறைவடைந்துள்ள சின்னமலை முதல் விமான நிலையம் வரையும், ஆலந்தூரில் இருந்து பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads