[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

அரசு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை - சிசிடிவி காட்சிகள்

patient-commits-suicide-by-jumping-off-hosp-building

திருச்சி அரசு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்துகொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருச்சி கல்லுக்குழி அருகே உள்ள முடுக்குபட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி மீராபாய். இவர்களுக்கு 3 பிள்ளைகள். இதில் இளைய மகன் கணேசமூர்த்தி. இவர் கோவையில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்  குணமாகவில்லை. 

இதனிடையே கடந்த 22 ஆம் தேதி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த போது அவருக்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய் தாக்கி இருந்தது தெரியவந்தது. மருத்துவமனையின் 6வது தளத்தில் உள்ள உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், நேற்று காலை திடீரென மருத்துவமனையில் 6வது தளத்தின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த கணேசமூர்த்தியை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த அரசு மருத்துவமனை போலீசார், விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணேசமூர்த்தி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை. மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில், கணேசமூர்த்திக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அடுத்த ஒருசில நாட்களில் வீட்டிற்கு செல்லும் நிலை இருந்தார். இந்தச் சமயத்தில் கணேசமூர்த்தி மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்துள்ளார். அவர் உள்நோயாளியாக இருந்தபோது உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதனால் சிகிச்சை குறைபாடு காரணமாகவோ, நோய் குணமாகவில்லை போன்ற காரணத்திற்காகவோ அவர் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றார். 

 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close