[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கடல் சீற்றத்தில் சிக்கி கவிழ்ந்த படகு: கடலில் தத்தளித்த மீனவர்கள் - வீடியோ

man-drowns-at-bay-of-bengal-in-nagai

கடல் சீற்றத்தில் சிக்கி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார்

கடந்த சில தினங்களாக நாகையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் நாகை கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த 3 பேர் பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்றனர். 28ஆம் தேதி அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற அவர்கள், நண்பகல் கரை திரும்பி கொண்டிருக்கும்போது கடல் சீற்றம் காரணமாக அவர்களின் படகு கவிழ்ந்தது. படகில் இருந்த மூவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வேலாயுதம், முகுந்தன் ஆகிய இருவரையும் துறைமுகத்தில் முகாம் அமைத்துள்ள கடற்படையினர் படகில் சென்று பத்திரமாக மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கடலில் மாயமான முருகவேலை கிராம மீனவர்கள் பைபர் படகு மூலம் கடலோர பகுதியில் தேடி வந்த நிலையில் அக்கரைப்பேட்டை அருகே அவரது உடல் கரை ஒதுங்கியது 

கடல் சீற்றத்தில் சிக்கி படகு கவிழ்வதும், அலையில் சிக்கி மீனவர்கள் போராடுவதும் செல்போனில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close