சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க முடியாது என சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேலின் பணிக்காலம் முடிந்த நிலையில், சிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகளை அவர் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் ஆவணங்களை தருவதற்கு மறுப்பு தெரிவித்து பொன் மாணிக்கவேல் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நீதிமன்ற அனுமதி இல்லாமல் ஆவணங்களை தருவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க தன்னை உயர்நீதிமன்றம் நியமித்து, அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது என்பதால், தமிழக அரசின் உத்தரவு தனக்கு பொருந்தாது என்றும், நீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க அனுமதியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆவணங்களை ஒப்படைக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு டிசம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், அதுவரை அரசு காத்திருக்க வேண்டும் என பொன் மாணிக்கவேல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!