[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

ஜெயலலிதாவிற்கு ஜாதகம் பார்த்த டி.என்.சேஷன் - சுயசரிதையில் சில பக்கங்கள் 

t-n-seshan-wrote-to-jayalalitha-story-in-his-biography-book

தனது சுயசரிதையில் ஜெயலலிதாவிற்கு ஜாதகம் பார்த்தது குறித்து டி.என்.சேஷன் எழுதி இருக்கிறார். அப்போதே அவர் தனக்கு ஜோதிடத்தில் மிகுந்த பயிற்சி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவர் ஜெயலலிதாவின் ஜாதகத்தை பார்த்து என்ன சொன்னார்? என்ன நடந்தது?

1990களுக்கு முன்புவரை அப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்றே பொதுமக்களுக்குத் தெரியாது. தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே பல அரசியல் கட்சி தொண்டர்கள் அடுத்தவர் வீட்டு சுவர்களில் சடுகுடு ஆடத் தொடங்கிவிடுவார்கள். இந்த அடிப் பிடி சண்டையில் ஒவ்வொரு வீட்டு சுவரிலும் கேட்க கேள்வி இல்லாமல் தங்களின் கட்சி சின்னத்தை வரைந்து விடுவார்கள். இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் அதுவரை எடுக்கப்பட்டதற்கான தரவுகள் இல்லை. அதிரடியாக ஒருவர் களத்தில் இறங்கினார். இந்தியாவையே தன் செயல்களால் திரும்பி பார்க்க வைத்தார். அவர்தான் டி.என்.சேஷன். 

இவர் 1990-ஆம் ஆண்டு 10-வது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதுவரை காகிதத்தில் மட்டுமே இருந்த சட்ட விதிமுறைகளை கடுமையான உத்தரவுகளால் நடைமுறைப்படுத்த தொடங்கினார். 

குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரை செய்வதை தடை செய்தார். வாக்குச் சாவடிகளுக்குள் அரசியல் கட்சி தொண்டர்கள் மிக சர்வசாதாரணமாக புழங்கும் நிலை இருந்தது. வாக்காளர்களை வண்டி வைத்து அழைத்து வந்து வாக்களிக்க வைக்கும் நிலையை மாற்றினார். தடுப்பணைகள் வைத்தார். குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கட்சியினர் சுதந்திரமாக நடமாடுவதை தடுத்தார். இப்படி இன்று நடைமுறையில் உள்ள பல விதிமுறைகளுக்கு முதலில் வித்திட்டவர் சேஷன். இவரால் சீரமைக்கப்பட்டது தேர்தல் ஆணையம். அதற்கு என்று தனியான அதிகாரம் உள்ளது என உலகறிய வைத்த பெருமைக்குரிய மனிதர் சேஷன்.

இவர் தனது வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதி உள்ளார். இந்த நூலில் பல சுவாரஸ்யமான விஷயங்களை இவர் விவரித்துள்ளார். அதில் தனக்கு ஜாதகம் பார்ப்பதில் அலாதியான ஈடுபாடு இருந்ததாக சேஷன் தெரிவித்துள்ளார். ஒருவரின் ஜாதகத்தை பார்த்த உடனேயே அதனுடைய சாதக பாதகங்களை சரியாக கண்டறியும் திறன் தனக்கு இருந்ததாகவும் அவர் எழுதி இருக்கிறார். இப்படி ஒரு அத்தியாயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகம் பற்றி சேஷன் ஒரு தகவலை தந்துள்ளார். அதாவது தனக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான நண்பர் ஒருவர் மூலமாக ஜெயலலிதாவின் ஜாதகம் தனக்கு கிடைத்ததாகவும் அதனைப் பார்த்த போது தான் ஆடி போய் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

“ஜோதிடத்தில் எனக்கு அபாரமான நம்பிக்கை உண்டு. அதேபோல், ஜோதிட அறிவும் உண்டு. ஒருத்தர் ஜாதகத்தை பார்த்தேன் என்றால் அவர் எப்படிப்பட்டவர் அவர் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஓரளவு கணித்துவிடுவேன். ஜெயலலிதாவுக்கும் எனக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலமாகத்தான் ஜெயலலிதாவின் ஜாதகம் எனக்குக் கிடைத்தது. அந்த நண்பர், எங்கள் இரண்டு பேரிடமும் கொஞ்சம் நட்புடனும் பிறகு கோபமுடனும் பழகியவர். அவர் கொடுத்த ஜாதகத்தின்படி ஜெயலலிதாவின் பிறந்த தேதி, 24.02.1948. ஜனன நேரம், மதியம் 2.30 மணி. பிறந்த இடம் மைசூர்.

ஜெயலலிதாவின் ஜாதகம் உண்மையில் அருமையான ஜாதகம். ரொம்பவும் ராஜயோகமான ஜாதகம். ஒரு ராஜாவுக்கு இருக்க வேண்டிய அனைத்து அறிகுறிகளும் அவருடைய ஜாதகத்தில் இருந்ததை நான் பார்த்ததுமே புரிந்து கொண்டேன். ஆனால் இந்த மாதிரி ஜாதகக்காரர்களின் நிலை ஒரே மாதிரியாக இருக்காது. சக்கரத்தில் ஒரு புள்ளியை வைத்து சுற்றிவிட்டால், எப்படி அது மேலேயும் கீழேயும் மாறி மாறிப் போய் வருகிறதோ அதே மாதிரிதான் இந்த ஜாதகத்துக்கு உரியர்களின் நிலையும். 

1990- 91 ஆம் வருடங்களில் அவரது ஜாதகத்தில் எல்லாமே நல்லபடியாக அமைந்திருந்தன. ஆனால் 1993 ஆம் வருட வாக்கிலேயே அந்த யோகங்கள் முடிந்து, எதிர்காலம் கடினமானதாக இருக்கும் என்று ஜாதகம் உணர்த்தியது. அதாவது பதவி, பெயர், புகழ் ஆகியவை கெட்டு, உச்சத்தில் இருக்கக் கூடிய நேரம் முடிந்து, அவர் கீழே வரும் நேரம் தொடங்கப் போகிறது என்று அவரிடைய ஜாதகத்தைப் பார்த்தவுடனேயே எனக்குத் தெரிந்ததுவிட்டது.

தலைமைத் தேர்தல் கமிஷனர் என்ற பதவியிலிருந்து கொண்டு ‘உங்களுக்கு சங்கடமான காலம் வரும்’ என்று ஒரு அரசியல்வாதியிடம் சொன்னால், அதற்கு ஜோதிட முறையான விளக்கம் போய் வேறு ஏதாவது விளக்கம் வரக்கூடும் என்பதால் என் மனதுக்குள்ளேயே இந்தச் செய்திகளை வைத்துக் கொண்டேன்.

அப்படியேயும் லேசாக அவருக்குக் கோடிட்டுக் காட்ட ஒரு சந்தர்ப்பம் வந்தது. 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி அன்று சனிக்கிழமை என்று நினைக்கிறேன். அப்போது நான் சென்னையில் இருந்தேன். ‘மேடம் உங்களைப் பார்க்க விரும்பிறார்’ என்று எனக்குச் செய்தி வந்தது. தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவைச் சென்று பார்த்தேன். அப்போது எஸ்டிஎஸ்ஸும் உடன் இருந்தார். அது தனிப்பட்ட சந்திப்பு இல்லை.

ஏதோ பேச்சுவாக்கில் ‘உங்களிடைய ஜாதகத்தைப் பார்த்திருக்கிறேன்’ என்று நான் சொன்னேன். ‘அப்படியா? எப்படியிருக்கிறது? சொல்லுங்கள்’ என்று ஜெயலலிதா கேட்டார். ‘நல்ல ஜாதகம்தான். ஆனால், நீங்கள் இனி கவனமாக இருப்பது நல்லது. நல்லநேரம் முடிந்து உங்களுக்கு மோசமான நேரம் ஆரம்பிக்கப் போகிறது” என்று மேலெழுந்தவாரியாகச் சொன்னேன். அன்றைய நிலவரப்படி தெய்வ பக்தியும், நல்லவர்களின் சகவாசமும் இருந்தால் கெடுதல் அதிகம் வராமல் ஜெயலலிதா காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும். 

ஒரு சக்கரவர்த்திக்கும் மேலாக ஐந்து வருடம் கோலோச்சி, மாட மாளிகையில் இருந்தவர் இந்த நிலைக்கு வந்துவிட காரணம் கெட்ட நேரம்தான். இப்போதும் வரப் போகிற ‘குருப்பெயர்ச்சி’யால் அவருக்குப் பெரிய நல்லது ஒன்றும் நடந்துவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை. சனிப்பார்வை அவர் மீது உக்கிரமாக இருப்பதால் துன்பங்களில் இருந்து மீள்வதற்கு இரண்டு வருடங்களுக்கு மேல் தேவைப்படும். அப்படியும்கூட ஜெயலலிதா தனது பழைய நிலைக்கு இனி வரவே முடியாது. இனியாவது அவர் எச்சரிக்கையாக இருப்பதுதான் நல்லது.

ஜெயலலிதாவின் நட்சத்திரம் மகம். அதற்காக ‘மகம் அண்டம் ஆளும்’ என்ற சின்னச்சின்ன பழமொழிகளை மட்டுமே நிரந்தரமாக நம்பி காரியத்தில் இறங்கிட முடியாது” என நீள்கிறது அவரின் சுயசரிதை நூலான ‘என் கதை’. இந்தப் புத்தகத்தில் இந்திரா காந்தி பற்றி மேலும் ராஜீவ் காந்தியுடன் தகராறு எனப் பல விஷயங்களை எழுதியிருக்கிறார் சேஷன்.    

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close