புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டியில் மகன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுத தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரையப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(75). இவரது மகன் ராஜாங்கம்(46). ராஜாங்கத்துக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 மகள் 1 மகன் உள்ளனர். இவர்களில் 3 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. வாரச்சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்து வரும் ராஜாங்கம் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வயிற்றுவலி காரணமாக ராஜாங்கத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் ராஜாங்கம் மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரான அரையப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது உடலை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது, மகன் இறந்ததை அறிந்த ராஜாங்கத்தின் தந்தை ஆறுமுகம் கதறி அழுதார். அப்போது துக்கம் தாளாத அவருக்கு திடீரென அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அருகில் இருந்த மருத்துவர்களை அழைத்து வந்து சோதனை செய்தபோது ஆறுமுகமும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தது அந்தக் கிராமத்தினரையே சோகத்தில் ஆழ்த்தியது.
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு
பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு
கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..? நிர்மலா சீதாராமன் விளக்கம்..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!